அப்பாவின் சஷ்டியப்தபூர்த்தி
அடுத்தவர் அறியாமல்
கள்ளக்கல்யாணம்போல நடந்தது....
* * *
அம்மா இருக்க
அறுபது வயசில்
இன்னொரு பெண்ணைத் தாலி கட்ட
எத்தனை ரகசியங்களின் காவல் வேண்டுமோ
அத்தனையுடனும்
அம்மாவை அறுபது பண்ணிக்கொண்டார்.
* * *
அப்பாவின் அலுவலகத் தலைகள் ஏதும் நுழைந்துவிடாதிருக்க
அவர்கள் முகமறிந்த நான்
அர்த்த மண்டபத்தில் காவலிருந்ததால்
அப்பாவின் கிழட்டுக் கல்யாணத்தையும்
கண்ணுறக் கிட்டவில்லை.
* * *
ரெண்டு வயசு முந்திக்கொடுத்த
ஆரம்பப்பள்ளி ரகசியம் அரசு அறிந்தால்
அடுத்த கணம் வேலை போகும் என்பதை அறிந்திருந்த விரல்கள்
மார்கழிக்குளிரில் நடுங்குதென்று
அய்யர் தந்த தாலியை
அம்மாவின் கழுத்தில் அப்பா கட்டிக்கொண்டிருக்கிறார் என்று
நிசப்தத்திலிருந்து புறப்பட்டுவந்த
மாங்கல்ய ஸ்லோகத்தின் ரீங்காரத்தினின்றும் அறிந்துகொண்டேன்.
********
சுதேசமித்திரனின் அப்பா கவிதைத்தொகுப்பிலிருந்து நான் ரசித்த கவிதை
Monday, July 2, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment