Saturday, July 14, 2007

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே



சமீபத்தில் இங்கு நடந்த கோர்ட் கேஸ் இது. 12 வயதில் இன்னும் 5 பேருடன் செய்த கொலைக்குற்றத்துக்காக ஒரு சிறுவன் (பைலி ஜுனியர் குரரிகி) சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறான்.

பிஸ்ஸா டெலிவரி செய்யவந்தவரை அடித்துப்போட்டுவிட்டு அவரிடம் இருந்த பணத்தையும் பிஸ்ஸாவையும் எடுத்துக்கொண்டார்கள் இந்தச்சிறுவர்கள். தண்டனை பெற்ற அத்தனை பேருக்கும் வயது 18க்குள்தான்.


அதில் மிகக்குறைந்தவயதுடையவன் இந்த குரரிகிதான்(Bailey Kurariki,). குற்றம் செய்தபோது இவனுக்கு வயது 12 மட்டுமே. இப்போது 17 வயதாகிறது. ஏழு வருடசிறைத்தண்டனையில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழிந்து விட்டன. பிறக்கும்போது யாருமே குற்றவாளியாய் பிறப்பதில்லை. வளர்ப்பும் சேர்க்கையுமே

ஒருவரின் குணத்தை செதுக்குகிறது. கூடா நட்பு என்பது எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது.


இரண்டு முறை பரோலுக்கு முயற்சி செய்து பரோல் மறுக்கப்பட்டுவிட்டது இச்சிறுவனுக்கு. உளவியல் சோதனைக்குட்படுத்தியதில் மீண்டும் குற்றம் இழைக்க நிறைய வாய்ப்புள்ளதாக உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.


இச்சிறுவனின் முகத்தைப்பாருங்கள். இவனப்போய் கொலைகாரன் என்கிறார்களே என்பீர்கள்.

Friday, July 6, 2007

ஜூலை ஏழு

இன்னிக்கு 07/07/07
இது 1000 வருஷத்துக்கு ஒரு தரவ தான் வருமாமே.

Thursday, July 5, 2007

சோதனை

சோதனை மேல் சோதனை

நாளைக்கு நல்லா குளிரும் மழையும்னு டீவில சொல்லிட்டாங்க
அதிகபட்சம் 7டிகிரி செ.கி. குறைந்தபட்சம் 6டிகிரி செ.கி.

Monday, July 2, 2007

அட்டமம்




நம்மளையும் மதிச்சு கண்மணி எட்டு போடவாங்கன்னு கூப்பிட்டுருக்காங்க. என்னன்னு போடறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன். எதோ பின்னுட்டம் போட்டமா பதிவுகளப்படிச்சமான்னு இருந்த என்ன நல்லா மாட்டி விட்டுட்டாங்க.
1. நான் பொறந்தப்ப அம்மாவுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்காம பொறந்தேன்னு சொல்லுவாங்க. அம்மாவுக்கு வலி வந்ததும் ஆட்டொல கூட்டிட்டுப்போயிருக்காங்க. டாக்டர் வந்து பாத்து செக்கப் பண்ணும்போதே நான் பொறந்தாச்சு. இன்னும் ஒரு நிமிசம் தாமதிச்சுருந்தாலும் ஆட்டொலயே பொறந்துருப்பனாம். ஹூம் , அப்படியாவது நம்மளப்பத்தி எதாச்சும் செய்தி வந்திருக்கும்.
2. பிறந்து கொஞ்ச நாள்லயே ப்ரைமரி காம்ப்ள்க்ஸ்னு டயக்னைஸ் பண்ணியிருக்காங்க. அவ்வளவுதான் பூட்ட கேஸ்னு நெனச்சது தினம் 3 ஊசி போட்டு பொழச்சு வந்தாச்சு. அப்பல்லாம் இது கொஞ்சம் பயப்படறமாதிரி நோய்தானாம். எங்கப்பா மாச சம்பளம் வாங்கி அப்படியே டாக்டருக்கு பீஸ் குடுத்துருவாராம். நல்லவேளை!! அது எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை. தெரிஞ்சவங்க மத்தியில சின்னதுல எனக்கு ஆரோக்ய மேரின்னு பட்டப்பெயர் உண்டு.
3. வீட்டில் நாந்தான் கடைசி.மூணாவதும் கடைசியும். கடைக்கு கூட்டிட்டுப்போனா துருதுருன்னு எதாவது குறும்பு பன்ணீட்டு இருக்கறத்ப்பாத்த கடைக்காரர் 'மூணாவது பொறந்ததா"ன்னு கேட்டாராம். அவருக்கும் வீட்டுல ஒரு அறுந்த வானரமமிருந்திருக்கும் போல இருக்கு.
4. . ப்ளஸ் டூ முடிச்சுட்டு கூடப்படிச்சவங்க எல்லாம் பிகாம் சேர்ந்தாங்க. காசு குடுத்தாதான் பிகாம் சேரமுடியும்போல இருந்துது. அதனால எகனமிக்ஸ் சேர்ந்து படிச்சேன்.யூஜில நாந்தான் பர்ஸ்ட் மார்க். அப்பறம் போஸ்ட் க்ராஜுவேஷனும் பண்ணியாச்சு. 5. படிக்கும்போதே earn while you learn -ல சேர்ந்து நானும் என் தோழியும் பார்ட் டைம் வேலை பார்த்தோம். ரொம்ப பெரிய தொகை இல்லன்னாலும் ஒரு அளவுக்கு பணம் கிடைச்சுது. சுயமா அப்பவே பணம் சம்பாதிக்கிறோம்னு சந்தோஷம் வேற. அப்பவே சொந்தக்கால்ல நிக்கணும்னு ரொம்ப ஆசை. படிக்கும் போதே காம்ப்படிடிவ் எக்ஸாம் எழுதினேன். படிச்சுமுடிச்சதும் ஆயுள் காப்பீட்டு கழகத்தில வேலையும் கிடைச்சுது. 5 வருசம் அங்கேதான் வேலை. கல்யாணமாகி நியூஸி வர்ர வரைக்கும். இங்கயும் வந்து ஒரு வங்கியில் பணி. 7. என்னொடது கலப்பு திருமணம். ஆனா அரேஞ்டு தான்.எங்க வீட்டுல சாப்பாட்டுல சைவம். அதனால மாப்பிள்ளையும் சைவமா இருக்கமாரி பாத்தாங்க. கடைசில ரங்கமணி மாட்டுனார். இன்னி வரைக்கும் சைவமா தாக்குபிடிச்சுட்டு இருக்கோம். 6. ஈரோடு, பொள்ளாச்சின்னு ஊர் சுத்தீட்டு திரும்ப கோயமுத்தூருக்கே வந்தாச்சு. அப்பறம் நியுஸியும் வந்தாச்சு. ஈரோட்ல ஹாஸ்டல்ல தங்கி வேலைக்குப்போயிட்டு இருந்தேன். அந்த நாட்கள் மறக்கவே முடியாது. என்னக்கேட்டா எல்லாரும் கொஞ்ச நாள் அப்பா அம்மாவ விட்டு இப்படி தனியா இருந்தா உலக அனுபவம் கிடைக்கும்னு சொல்வேன்
8. நியூஸி வந்து 8 வருஷம் ஆச்சு. போன வருஷம் எதோ நியூஸி பத்தி தேடுனப்போதான் துளசி டீச்சர் ப்லொக் கண்ணுல மாட்டுச்சு. அப்பதான் தமிழ்மணம்னு ஒண்ணு இருக்கறதும் தமிழ்ல இவ்வளவு பதிவுகள் இருக்கறதும் தெரிஞ்சுது. அப்பறம் கார்த்தியின் கனவுலகம், அபி அப்பா, கண்மணி, இலவச கொத்தன்னார் னு நிறைய பேர் பதிவு படிச்சு நம்ம அறிவயும் வளத்துக்கிட்டு இருக்கேன்.
விளையாட்டின் விதிகள்:1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.
இதுவரைக்கும் யாரெல்லாம் எழுதலயோ அவங்க எல்லாரும் 8 போட்ருங்க சீக்கிரமா

அப்பாவின் அறுபது

அப்பாவின் சஷ்டியப்தபூர்த்தி
அடுத்தவர் அறியாமல்
கள்ளக்கல்யாணம்போல நடந்தது....
* * *
அம்மா இருக்க
அறுபது வயசில்
இன்னொரு பெண்ணைத் தாலி கட்ட
எத்தனை ரகசியங்களின் காவல் வேண்டுமோ
அத்தனையுடனும்
அம்மாவை அறுபது பண்ணிக்கொண்டார்.

* * *

அப்பாவின் அலுவலகத் தலைகள் ஏதும் நுழைந்துவிடாதிருக்க
அவர்கள் முகமறிந்த நான்
அர்த்த மண்டபத்தில் காவலிருந்ததால்
அப்பாவின் கிழட்டுக் கல்யாணத்தையும்
கண்ணுறக் கிட்டவில்லை.

* * *
ரெண்டு வயசு முந்திக்கொடுத்த
ஆரம்பப்பள்ளி ரகசியம் அரசு அறிந்தால்
அடுத்த கணம் வேலை போகும் என்பதை அறிந்திருந்த விரல்கள்
மார்கழிக்குளிரில் நடுங்குதென்று
அய்யர் தந்த தாலியை
அம்மாவின் கழுத்தில் அப்பா கட்டிக்கொண்டிருக்கிறார் என்று
நிசப்தத்திலிருந்து புறப்பட்டுவந்த
மாங்கல்ய ஸ்லோகத்தின் ரீங்காரத்தினின்றும் அறிந்துகொண்டேன்.

********

சுதேசமித்திரனின் அப்பா கவிதைத்தொகுப்பிலிருந்து நான் ரசித்த கவிதை

Saturday, June 30, 2007

அப்பாவின் வீரம்

அப்பா குடிப்பார் என்று
அப்போது எனக்கெப்படித் தெரிந்திருக்க முடியும்?
அந்த வார்த்தையே அறிந்திராத வயசு எனக்கு....

* * * *
அம்மா பத்திரகாளியாய்
என்னையும் அக்காவையும்
அர்த்தம் புரியாமல் அழுகின்ற மழலையின் தெய்வீகத் துணையின் பொருட்டும்
கரங்களில் பற்றிக்கொண்டு
தட்டிற்று கதவை...
அம்மா நிஜமாகவே பத்திரகாளிதான்,
அது கை கட்டி வாய் பொத்து ~ என்றால் ஒருமணி உட்கார்ந்திருந்த
தினங்கள் உண்டு.
அப்போதெல்லாம் அப்பாவின் மத்தியஸ்தம்
அருகாமைத்திரையரங்கில் அடுத்த
சினிமாவாயும் பாப்கார்னாயும் வெளிப்படும்....

* * * *

அப்பா இருந்த உறக்க அறைக்கதவு இடிபட்டது...
நீ என் தம்பியாடா? குடி கெடுக்க வந்தவனே...
....நீங்க எக்கேடும் கெட்டுப்போங்க,
நான் என் பிள்ளைகளோட நல்லதங்காளாய் போறேன்...
~எனக்கு அப்போதே நல்ல தங்காள் கதை தெரியும்,
என்னைக் கிணற்றின் இருட்டும் கெட்ட நீரின் பலாத்காரமும் மருட்டின.
அழுதே அன்றைக்கு உயிரை விட்டிருப்பேன்....
அப்பாவாச்சும் வெளியே வந்து விடாமல் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும்
என் அழுகைக்கு ஒரு அர்த்தமிருப்பதுமட்டும் அம்மாவுக்குத்
தெரிந்தால்....?

* * * *
கதவு திறந்து அப்பா தெரிந்தார்
அப்பாவின் காலிடுக்கில் அறையின் மையத்தில் மாமாவும்
அந்த டீப்பாயின் மேலே பாட்டிலொன்றும் தெரிந்தன.
அம்மா ரொம்ப மோசம்...
வாட்டர்பர்ஸ் காம்பெளண்டு அதுவே எனக்குத்தரும்,
அப்பா குடித்தால் தப்பா?

* * * *
அப்பாவின் மெளனம் அம்மாவைச் சீண்டிற்று,
சாவேன்... இதோ இதைக்குடித்து என் பிள்ளைகளோடு சாவேன்
~ என்று அதுவும் ஒரு பாட்டிலைக் காட்டிற்று...

* * * *
அப்பா வாய் திறந்து ஒரு வார்த்தை மட்டும் சொன்னார்,
சரி!
~ கதவடைத்து உள்ளே போனார்

* * * *

இந்தக்கவிதை சுதேசமித்திரனின் "அப்பா"
என்ற கவிதைத்தொகுப்பிலிருந்து நான் படித்து ரசித்தது.

லேட்டா பாத்தாலும் லேட்டஸ்டா பாத்தேன்

இன்னிக்கு பெரியார் படம் பாத்தேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையிலேயே நல்லது செய்யணும்னு நினைச்ச நல்ல மனம் கொண்டவரப்பத்தின படம். ஒரே மூச்சுல பாத்தேன். ரொம்ப நாளைக்கப்பறம் இப்படி ஒரே சிட்டிங்ல பாத்த படமமிதுதான். எப்பயும் அரைஅரை மணி நேரமாத்தான் பாக்கரது.
மக்களுக்கு நல்லது செய்ய பதவி தடைன்னா பதவியே வேண்டாம்னு சொன்னவர். ஆனா அவரோட கொள்கைகள பின்பற்றுகிறோம்னு சொல்றவங்க சிலர்......ம்ம்ம்ம். நமக்கெதுக்கு அரசியல்.

இன்னொரு படமும் பாத்தென். பெரியார் படத்துக்கு எதிர்பதமா இருந்துது. எப்படியெல்லாம் படம் இருக்கக்கூடாதோ அப்படியே இருந்தது. அப்பயும் ஓட்டி ஓட்டி பாத்துட்டமில்ல. படம் பேரு கணபதி வந்தாச்சு. தெரியாமக்கூட பாத்துராதீங்க.

அடுத்த வாரம்தான் சிவாஜி பாக்கப்போறேன். எல்லாரும் பாத்தாச்சு. நாம மட்டும் பாக்காம இருந்தா எப்படி.

Tuesday, June 26, 2007

கலியாணத்துக்கு முன்னும் கலியாணத்துக்கு பின்னும்

Before marriage:

He: Yes. At last. It was so hard to wait.
She: Do you want me to leave?
He: NO! Don't even think about it.
She: Do you love me?
He: Of course!
She: Have you ever cheated on me?
He: NO! Why you even asking?
She: Will you kiss me?
He: Yes!
She: Will you hit me?
He: No way! I'm not such kind of person!
She: Can I trust you?
He: Yes.

Now after marriage you can read it from below to up !!!!

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து படித்தேன். எல்லாக்கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருந்தது.
அதில் ஒரு கொத்து சாவிகள் என்ற கதையும் சொல்லாத சொல் என்ற கதையும் மனசைத்தொட்டது. ஒரு வீடு குடும்ப சண்டையால் இடிக்க நேர்வதும் அது ஆசிரியரை பாதித்த விதமும் அருமை.

சொல்லாத சொல் என்ற கதையில் நண்பரின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்வதெ இல்லை என்பதும் அதற்கான காரணமும் எடுத்துச்சொன்ன விதம் மிகவும் நன்றாக இருந்தது.

எழுத்தாளரின் உபபாண்டவம் படிக்க காத்திருக்கிறேன்.

(எஸ்.ராமகிருஷ்ணன் சினிமாவுக்கு கதை வசனம் எழுதப்போய்விட்டாராமே. சுஜாதாமாதிரி
இயக்குனர்களுக்கு மட்டும் வசனம் எழுதாமல் கதைக்கு இவராவது வசனம் எழுதட்டும்)

Monday, June 25, 2007

நானும் ஒரு எட்டு போட்டாச்சுங்கோ


நம்மளையும் மதிச்சு கண்மணி எட்டு போடவாங்கன்னு கூப்பிட்டுருக்காங்க. என்னன்னு போடறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன். எதோ பின்னுட்டம் போட்டமா பதிவுகளப்படிச்சமான்னு இருந்த என்ன நல்லா மாட்டி விட்டுட்டாங்க.

1. நான் பொறந்தப்ப அம்மாவுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்காம பொறந்தேன்னு சொல்லுவாங்க. அம்மாவுக்கு வலி வந்ததும் ஆட்டொல கூட்டிட்டுப்போயிருக்காங்க. டாக்டர் வந்து பாத்து செக்கப் பண்ணும்போதே நான் பொறந்தாச்சு. இன்னும் ஒரு நிமிசம் தாமதிச்சுருந்தாலும் ஆட்டொலயே பொறந்துருப்பனாம். ஹூம் , அப்படியாவது நம்மளப்பத்தி எதாச்சும் செய்தி வந்திருக்கும்.
2. பிறந்து கொஞ்ச நாள்லயே ப்ரைமரி காம்ப்ள்க்ஸ்னு டயக்னைஸ் பண்ணியிருக்காங்க. அவ்வளவுதான் பூட்ட கேஸ்னு நெனச்சது தினம் 3 ஊசி போட்டு பொழச்சு வந்தாச்சு. அப்பல்லாம் இது கொஞ்சம் பயப்படறமாதிரி நோய்தானாம். எங்கப்பா மாச சம்பளம் வாங்கி அப்படியே டாக்டருக்கு பீஸ் குடுத்துருவாராம். நல்லவேளை!! அது எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை. தெரிஞ்சவங்க மத்தியில சின்னதுல எனக்கு ஆரோக்ய மேரின்னு பட்டப்பெயர் உண்டு.
3. வீட்டில் நாந்தான் கடைசி.மூணாவதும் கடைசியும். கடைக்கு கூட்டிட்டுப்போனா துருதுருன்னு எதாவது குறும்பு பன்ணீட்டு இருக்கறத்ப்பாத்த கடைக்காரர் 'மூணாவது பொறந்ததா"ன்னு கேட்டாராம். அவருக்கும் வீட்டுல ஒரு அறுந்த வானரமமிருந்திருக்கும் போல இருக்கு.
4. . ப்ளஸ் டூ முடிச்சுட்டு கூடப்படிச்சவங்க எல்லாம் பிகாம் சேர்ந்தாங்க. காசு குடுத்தாதான் பிகாம் சேரமுடியும்போல இருந்துது. அதனால எகனமிக்ஸ் சேர்ந்து படிச்சேன்.யூஜில நாந்தான் பர்ஸ்ட் மார்க். அப்பறம் போஸ்ட் க்ராஜுவேஷனும் பண்ணியாச்சு.

5. படிக்கும்போதே earn while you learn -ல சேர்ந்து நானும் என் தோழியும் பார்ட் டைம் வேலை பார்த்தோம். ரொம்ப பெரிய தொகை இல்லன்னாலும் ஒரு அளவுக்கு பணம் கிடைச்சுது. சுயமா அப்பவே பணம் சம்பாதிக்கிறோம்னு சந்தோஷம் வேற.
அப்பவே சொந்தக்கால்ல நிக்கணும்னு ரொம்ப ஆசை. படிக்கும் போதே காம்ப்படிடிவ் எக்ஸாம் எழுதினேன். படிச்சுமுடிச்சதும் ஆயுள் காப்பீட்டு கழகத்தில வேலையும் கிடைச்சுது. 5 வருசம் அங்கேதான் வேலை. கல்யாணமாகி நியூஸி வர்ர வரைக்கும். இங்கயும் வந்து ஒரு வங்கியில் பணி.

7. என்னொடது கலப்பு திருமணம். ஆனா அரேஞ்டு தான்.எங்க வீட்டுல சாப்பாட்டுல சைவம். அதனால மாப்பிள்ளையும் சைவமா இருக்கமாரி பாத்தாங்க. கடைசில ரங்கமணி மாட்டுனார். இன்னி வரைக்கும் சைவமா தாக்குபிடிச்சுட்டு இருக்கோம்.

6. ஈரோடு, பொள்ளாச்சின்னு ஊர் சுத்தீட்டு திரும்ப கோயமுத்தூருக்கே வந்தாச்சு. அப்பறம் நியுஸியும் வந்தாச்சு. ஈரோட்ல ஹாஸ்டல்ல தங்கி வேலைக்குப்போயிட்டு இருந்தேன். அந்த நாட்கள் மறக்கவே முடியாது. என்னக்கேட்டா எல்லாரும் கொஞ்ச நாள் அப்பா அம்மாவ விட்டு இப்படி தனியா இருந்தா உலக அனுபவம் கிடைக்கும்னு சொல்வேன்
8. நியூஸி வந்து 8 வருஷம் ஆச்சு. போன வருஷம் எதோ நியூஸி பத்தி தேடுனப்போதான் துளசி டீச்சர் ப்லொக் கண்ணுல மாட்டுச்சு. அப்பதான் தமிழ்மணம்னு ஒண்ணு இருக்கறதும் தமிழ்ல இவ்வளவு பதிவுகள் இருக்கறதும் தெரிஞ்சுது. அப்பறம் கார்த்தியின் கனவுலகம், அபி அப்பா, கண்மணி, இலவச கொத்தன்னார் னு நிறைய பேர் பதிவு படிச்சு நம்ம அறிவயும் வளத்துக்கிட்டு இருக்கேன்.


விளையாட்டின் விதிகள்:1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.




இதுவரைக்கும் யாரெல்லாம் எழுதலயோ அவங்க எல்லாரும் 8 போட்ருங்க சீக்கிரமா








Saturday, June 9, 2007

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்


பார்க்கின்ற உலகீது கண்ணாடி நிழலினகர்
பகர்மாயை யாற்புறத்தே
பார்க்கின்ற தாகியான் மாவுளே நிற்பதுட்
பயில்கனவு பொய்யாதல்போல்
ஓர்க்கின்ற தாகுமெனும் உண்மையை உணர்த்தி
உலகுய்ய யோ கத்திருக்கும்
சீர்க்கின்ற குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (1)


வித்துக்குள் முளைபோற் படைப்புக்கு முன்பேதும்
வேற்றுமை யிலாததாகி
பித்துச்செய் மாயையால் தேசகா லங்களால்
பேதங்களா னவுலகைச்
சித்துச்செய் மாயாவி யோகியைப் போலச்
சிருட்டித்த தேவதேவே
சித்தர்க்குள் உறுமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (2)


எந்தமெய்ப் பொருளினோளி எப்பொருட் களிலும்
இயைந்தே விளங்கலுறுமோ
எந்தமெய்ப் பொருள்சரண் அடைந்தவர்க் கதுநீயென்
இனியவுப தேசமருண்மோ
எந்தமெய்ப் பொருள்தனைக் கண்டவர்க்குப் பிறவி
இனியில்லை யாகுமோவச்
சிந்தையுறு குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (3)


பலதுளைக ளுடைய குடமுற்றதீ பத்தினோளி
பரவலென ஐம்பொறிவழிச்
செலுமொளிய ஃதெது ? நான் அறிந்தேனனச்சொலத்
திகழுமொளி யெது? எதனையிவ்
வுலகமுழுதும் பற்றி யிகலுறும் அவ்வான்ம
சித்தாகி ஞானிகள்தொழும்
திகழுமுயர் குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (4)

உடலுடலில் உலவுவளி ஐம்பொறிகள் கரணங்கள்
ஒன்றுமே இல்லாதபாழ்
கெடலரிய தானென்று வாதியர்கள் மாயையால்
குளறினார் இகலினாரிம்
மடமைகெட மெய்யறிவு தருவதுன தருளன்றி
மற்றொன்றும் உண்டுகொல்லோ
திடமுதவு குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (5)

அராநுகர் கலாதர திவாகரர் சமானமுற
அருமாயை யுள்மறைந்தே
உராவுகர னாதிகள் ஒடுங்கிய உறக்கத்தில்
ஒருசத்த தாய்த்தனித்தோன்
விராவிய விழிப்புற வுறங்கினேன் முன்பென
விளம்பவமர் மெய்ப்பொருளதாம்
சிராமலைய குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (6)

பாலியமு தற்பருவம் நினைவாகி நிலையெனப்
படுவேறு நிலையிலெல்லாம்
மாலையுறு நாரென ஒரேபொருள தாய்நின்று
மாறாததன் மயத்தைக்
கோலியசின் முத்திரையின் அறிவுறுக் கின்றநற்
கோலத்த ஞானயோகச்
சீலமுறு குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (7)



நனவிலும் கனவிலும் உறக்கத்திலும் யாவன்
நள்ளிருந்தே மாயையால்
கனவிய பிராந்தனாய் உலகமிதனைக் கார்ய
காரணத் தன்மையோடும்
தனதுதன் சாமிதாய் தந்தைமுத லியபேத
தன்மையும் காணவல்ல
சினமதறு குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (8)

நிலனீர் நெருப்புவளி ஆகாயம் இரவிமதி
நிலவுமிய மானனென்னக்
குலவுசர அசரங்கள் தனதெட்டு வடிவமாக்
கொண்டவன் கூர்த்தமதியால்
அலசுவார்க்குத் தன்னை அன்றியொன் றேனுமின்
றானவன் பரமவான்மா
திலகநிகர் குருமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (9)

நூற்பயன்

எல்லா மேகபிரம்மயம் என்றே இயம்புமித் துதியை
வல்லார் சொல்லக்கேட்டாரும் மனதால் நினைக்கப்பெற்றாரும்
கல்லால் நீழற் கடவுளருள் கைவந் தவரே தாமாவார்
வல்லார் சித்தி எல்லாமும் வாழ்வோர் வானோர் மதித்திடவே !!

Friday, June 8, 2007

ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம் - தமிழாக்கம்

ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம்


விநாயக வணக்கம்

எந்நாளு மிளையோன் வினைக்குன் றழிப்பான்
இபமா முகன்பஞ்ச வதனன் மதிப்பான்
பொன்னாகர் சுரர்நாடு புனிதன் கணேசன்
பொன்றாத திருவாள னருள்பேணு வோமே.

நூல் - அவையடக்கம்

சொல்லேது பொருளேது கவியேது வசனந்
துகளேதும் இல்லாத தேதென்ப தறியேன்
எல்லேறு மறுமா முகச்சோதி யிதயத்
திருந்தே நறுந்தே னெனும்பாடல் தருமே.

செந்தில் நாயகன் வணக்கம்

மய்லூர்தி சதுர்வேத மறைகின்ற பொருளோன்
மனந்தன் வசங்கோள் மகானுள்ள முறைவோன்
பயிலும் மகாவாக் கிலக்கன் சிவன்சேய்
பனவர்க்கு மெய்த்தேவை நினைவின் கண்
வைத்தேன்.

என் முன்னர் வந்தோர் பிறப்பென்ற வேலை
யினை யேறி னாரென்று நிலமேல் விளக்கி
துன்னுங் கடற்செந்தி லுறைகின்ற தூயோன்
துங்கப் பராசக்தி யருள்சேயை நினைவாம்.

திரை பொன்று மாபோலும் வினைபொன்று மின்றே
திருமுன்பு வம்மின்க ளென நின்ற வன்போல்
திரைபந்தி யாய்வந்த கரைநின்ற செந்திற்
சேயோனை யிதயத்தி லேவைத் துளேனே.

இதிலேறி னோர்கலை யதிலேறி னோரே
என்பா னெனக்கந்த வரை மீது நின்றோன்
மதிபோலு மறுமா முகச்செந்தி னாதன்
மலர்போலு மடிவாழ்க யாம்வாழு மாறே.

பெருவேலை யோரத்தி லேபாவ நீக்கும்
பிரசித்தி சேர்சித்தர் வாழ்கந்த வெற்பில்
ஒருசோதி வடிவோடு குகைமேவு செந்தூர்
உயிருக்கொ ருயிர்செம்போ னடிபற்று வோமே

முருகன் திருமேனிச் சிறப்பு

பொற்கோயி லிற்பொன் மணிக்கட்டி லேறிப்
பொலிகின்ற ஒருகோடி ரவிமங்க வீசும்
விற்கோல நற்செந்தி லிற்கார்த்தி கேயன்
விபுதேச னைச்சிந்தை விழைகின்ற தாலோ.

திருவடிச் சிறப்பு

அஞ்சம் பொலிந்தே சிவந்தேர் நிறைந்தே
அமுதம் பொழிந்தே பிறப்ப்பென்ற கோடை
வஞ்சந் தவிர்ந்தே விளங்குன் பதத்தா
மரைமேவு மளிநெஞ்சமலைவாயின் முருகே.

திரு அரைச் சிறப்பு

இலகும்பொன் உடைமீது கணகண்க னென்றே
இசைகிண்கி ணீகச்சை யொடுபட்டை யம்போன்
அலகில்வி லதுவீசு செந்தூரி லம்மான்
அரைநீடு மழகென்றன் அகமேவி யனுமே.

திருமார்பின் சிறப்பு

குறமாதி னிருதுங்க தனகுங்கு மந்தான்
கொடுசேந்த தோ அன்பர் குலமீது கொண்ட
திறமான அநுராகம் வெளிநின்ற தோநின்
திருமார்பில் ஒளிசெந்தி லாயஃது தொழுவேன்.

திருக் கைகளின் சிறப்பு

அயனைப் புடைத்தண்ட நிரையைப் புரந்தே
ஆனைக்கை வென்றந்த கனையும் துரந்தே
துயரிந்த்ரன் பகைவென் றபயமென்ற நின்கை
துணை செய்க வுயர் செந்தி லிறைவா எமக்கே.

திருமுகச் சிறப்பு

பனியென்று முளவாயோர் பங்கம் படாமல்
பரிபூர்ண வோளியோடு பலதிக்கு நிலவை
நனிவீசு மதிமூ விரண்டென்று முளவேல்
நளிர் செந்தி லோனாறு முகமோக்கு மாலோ.

சிவன் மைந்த நகையென்ற அனமென்று மேவித்
திகழுங் கடைக்கண்களெனும் வண் டுலாவித்
தவவின்சொ லமுதூறு கொவ்வைச்செ விதழ்சேர்
சலசங்க ளெனுமாறு முகமென்று காண்பேன்.

திருக்கண்களின் சிறப்பு

குறைவென்கொ லேசெந்தி லாய்கா தளாவிக்
குறையாத அருள்வீசு விழிபன் னிரண்டில்
இறையேயொர் விழியின் கடைப்பார்வை தொழுமிவ்
வெளிநாயி னேன் மீதி லொருபோது விழுமேல்

திருமுடிச் சிறப்பு

எனதங்க நீமைந்த வாழ்கென்று மோந்தே
ஈசன் களிக்கின்ற தேசொன்று முடிசேர்
நினதிங்கள் முகமாறு மறவாது பணிவேன்
நிலைநின்ற செந்தூரில் வெளிநின்ற தேவே.

வேண்டுகோள்

வரவேணு மடியேன் முனெ செந்தி னாதன்
மணிமாலை கேயூர மசைகுண்ட லங்கள்
பிரகாச மிகமாடை யுடையோடு கையிற்
பிசகாத வடிவேலின் மிகுசோதி வீச.

தோத்திரங்கள்

குமரா எனச்சங் கரன் கைகள் நீட்டக்
குதித்தம்மை மடிநின்று பரனைத் தழீஇக்கொண்
டமரா மகிழ்ந்தாடு செந்தூரி லெம்மான்
அழகான மழமேனி மறவாது நினைவேன்.

குமரா சிவன்சேய் குறக்கன்னி நாதா
குகாகந்த சேனாப தீசத்தி பாணீ
எமார்வப்ரபோ தார காரீ மயூரா
இனாநீவு வாய் செந்தி லாயஞ்ச லென்னே.

ஐயுந்தி மெய்நொந்து பொறியைந்து மோய்ந்தே
அறிவின்றி யுளமஞ்சி யுயிர்மங்குபோதெ
நெய்நின்ற வடிவேல செந்தூர யாரே
நினையன்றி எனையஞ்சல் எனுமாவ லாரே.

யமதூதர் சுடுவெட்டு பிளவென் றதட்டி
எனைவெஞ் சினத்தோ டொறுக்கென்று வந்தால்
நமதன்ப அஞ்சே லெனச்சத்தி யேந்தி
நவிரத்தின் மிசைசெந்தி லாய்வந்து காவே.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தல்

உயிர்மங்கு பொழுதின்க ணுனதாள்க ணினையேன்
ஓசெந்தி லாயென்கி லேன்கைகள் குவியேன்
அயர்கின்ற அவ்வேளை கைப்விட்டி டேலென்
ஐயா உனக்கேகை யடையாகி னேனே.

மன வேதனை நீக்க வேண்டல்

அண்டங்க ளோராயி ரங்கொண்ட சூரன்
அவன்றம்பி மார்சிங்க முகனானை முகவன்
மண்டும் பலஞ்செற்ற வடிவெல் அலைவாய்
மருவும் குகாஎன்றன் மன நோயு மொழியே.

நீயே அடைக்கலம்

அடியேன் சதாதுக்கி நீயேழை பங்கன்
அறியேன் துணைவேறு சிறியேனை நலியும்
மிடியாவு நொடியேநுண் பொடியாக அருள்வாய்
மிளிர்வேல செந்தூரி லமர் தேவ மணியே

இலை விபூதி மகிமை

கண்டால்நி னிலைநீறு கைகால் வலிப்புக்
காசங் கயம்குட்ட முதலாய நோயும்
விண்டோடு மேபூத பைசாசம் யாவும்
வினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே.

பிரார்த்தனை

செந்திற் குமாரன் றனைக்கண்கள் காண்க
செவிஎந்தை புகழ்கேட்க வாய்சீர்த்தி பாட
கந்தன் திருத்தொண்டு கைசெய்வ தாக
கடையேன் அவன்தொண்ட னெனும்வாழ்வு சேர்க.

முருகனே ஏழை பங்கன்

பிறதேவர் முனிவர்க்கு மிகுபத்தி யோர்க்கும்
பிரியங்க டருவார்கள் புலையர்க்கு மருள்வார்
பிறர்யாவர் மணிவாரி யலை வீசு செந்திற்
பிரானன்றி யரியேன் சொனேன் நம்பு வீரே.


வழிவழி யடிமையாக வேண்டுதல்

மனைமக்கள் உறவாள ரடியார்கள் தோழர்
மற்றுள்ள பேர் என்றன் மனைவாழும் யாரும்
உனையன்பு கொடுபோசை புரிவோர்கள் தொழுவோர்
உனையோது வோராக அருள்செந்தி லானே.


பகை நீக்கி அருள வேண்டுதல்

கொடிதென்ற மிருகங்கள் பறவைக் குலங்கள்
கொடுநஞ்ச வகையென்னை மெலிவிக்க வந்தால்
வடிவிக்ர மச்சதி யாலே யழித்தே
வாழ்விக்கவே செந்தில் வாழ்கந்த வேளே.

பிழை பொறுக்க வேண்டுதல்

மகார் செய்த பிழைபெற்ற பேர் மன்னி யாரோ
மகனல்ல னோயான் விண் மண் பெற்றதந்தாய்
மகாதேவ செந்தூரில் வாழ்கந்த வேளெ
மன்னிக்க யான் செய்த புன்மைக்குழாமே.

போற்றி

மயில் போற்றி வேல் போற்றி மறியாடு போற்றி
வன்காற்படைச்சேவலும் போற்றி நந்தூர்
உயர் வெண்டிரைச் சிந்துவும் போற்றி முருகோன்
உபயப் பதம் போற்றி யுரை செந்தில் போற்றி

வாழ்த்து

ஜயவின்ப வடிவா ஜயச்சோதி ரூபா
ஜயப்பாவு புகழொய் ஜயத்தாவினின்போய்
ஜயவின்ப சிந்துஜயச்சர்வ பந்து
ஜயவின்ப வள்ளால் ஜயச்செந்தில் வாழ்வே

நூற்பயன்

திருச்செந்திநாதன் பதத்தே மணக்கும்
திருப்பாட்டி வைக்கார்வம் வைத்தெ படிப்போர்
திருப்பெண்டு மக்கட் சிறப்பின்ப வாழ்வும்
சிறக்கத் திகழ்ந்தின்ப வீடெய்துவாரே.